shadow

அஜித்தின் ‘விவேகம்’ ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துவிட்டது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் வெளிவரவுள்ளது உறுதியாகிவிட்ட நிலையில் தற்போது எடிட்டிங் பணிகள் முடிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எடிட்டிங் பணிகள் முடிந்தபின்னர் இந்த படம் 140 நிமிடங்கள் அதாவது 2 மணி 20 நிமிடங்கள் ஓடும் வகையில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒருவேளை சென்சாரில் கட் செய்யப்பட்டால் ரன்னிங் டைம் குறைய வாய்ப்பு உள்ளது. இல்லையே இந்த படத்தின் ரன்னிங் டைம் 140 நிமிடங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் 97% படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply