’வலிமை ‘டிரைலர் ரன்னிங் டைம் எத்தனை நிமிடங்கள் தெரியுமா?

தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளீல் வெளியாக உள்ளது

இந்த நிலையில் வலிமை படத்தின் டிரைலர் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த டிரைலர் 03.01 நிமிடங்கள் ஓடும் வகையில் உள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. இந்த டிரைலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.