வலிமை முதல் காட்சி ஆரம்பம்: ரசிகர்கள் கோலகல கொண்டாட்டம்!

அஜித் நடித்த வலிமை திரைப்படம் இன்று காலை 4 மணிக்கு தமிழகம் உள்பட உலகம் முழுவதும் ரிலீசாகி உள்ளது. அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில நகரங்களில் மட்டுமே 4 மணி காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது. சில நகரங்களில் 7 மணிக்கும் ஒரு சில நகரங்களில் 10 மணிக்கும் முதல் காட்சி ஆரம்பமாக உள்ளது

வெளிநாடுகளில் இந்திய நேரப்படி 4 மணிக்கு காட்சிகள் தொடங்கி விட்டது என்பதும், இரண்டு வருடங்கள் கழித்து அஜித் படத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.