ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா ‘வலிமை’: ரூ.500 கோடிக்க்கு விற்பனை என தகவல்!

வலிமை திரைப்படத்துடன் ரிலீசாக உள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் வலிமை திரைப்படத்திற்கு எந்தவிதமான புரமோஷனும் இல்லாமல் உள்ளது

இந்த நிலையில் வலிமை திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று வலிமை படத்தின் தயாரிப்பாளரிடம் ரூபாய் 500 கோடிக்கு உரிமையை பெற பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் விரைவில் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உள்பட பல வெளிநாட்டு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து இந்த படத்தை உலகம் முழுவதும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றும் வலிமை கண்டிப்பாக திரையரங்குகளில் தான் வரும் என்றும் படக்குழுவினர் உறுதிபட தெரிவித்துள்ளனர்.