shadow

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் இன்று அதிகாலை 4 மணிக்கு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் முதல் விமர்சனத்தை பார்ப்போம்.

‘வலிமை’ திரைப்படத்தின் இடைவேளை வரை அஜீத்தின் வெறித்தனமான நடிப்பு, இயக்குனர் வினோத் தரமான சம்பவம் ஆகியவை படத்தை தூக்கி நிறுத்தியுள்ளதாகவும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பைக் ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் படங்களில் கூட இல்லை என்றும் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் டுவிட் செய்துள்ளனர்.

’நாங்க வேற மாதிரி’ பாடல் மாஸாக இருப்பதாகவும், பைக் ரைடர்கள் செய்யும் அதிநவீன க்ரைம் தமிழ் சினிமாவுக்கு புதியது என்றும், அஜித் இந்த படத்தில் முழுக்க முழுக்க டாமினேட் செய்கிறார் என்றும் விமர்சனம் வந்துள்ளது.

இது இடைவேளை வரையிலான விமர்சனம் என்ற நிலையில் இடைவேளைக்கு பின் ‘வலிமை’ படம் எப்படி இருக்கிறது என்பதை விரைவில் பார்ப்போம்.