அஜித் கொடுத்த ரூ.1.25 கோடி நிதியுதவி யார் யாருக்கு?

 ரூ.1.25 கோடி நிதியுதவி செய்த தல அஜித்

பிரதமர் மற்றும் நிவாரண நிதியாக நாடெங்கிலும் உள்ள திரையுலக நட்சத்திரங்கள் பெரிய தொகையை நிதியுதவி செய்து வந்தாலும் தமிழ் நடிகர்களில் வெகு சிலரே நிதியுதவி செய்துள்ளனர்.

இந்த நிலையில் தல அஜித் ரூ.1.25 கோடி மத்திய, மாநில அரசுகள் மற்றும் பெப்சி அமைப்பிற்கு நிதியுதவி செய்துள்ளார்.

50 லட்சம் பிரதமர் நிவாரண நிதியாகவும், 50 லட்சம் முதல்வர் நிவாரண நிதியாகவும், கொடுத்துள்ள அஜித், ரூபாய் 25 லட்சம் பெப்ஸி தொழிலாளர்களுக்காகவும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply