ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த அஜீத்

ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த அஜீத்
ajith and vijay
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளையதலைமுறை நடிகர்களுக்கு இணையாக இன்னும் சுறுசுறுப்பாக ‘கபாலி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடிக்கவுள்ள ‘எந்திரன் 2’ திரைப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பும் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு அஜீத் மற்றும் விஜய் போட்டி போட்டு வரும் நிலையில், அந்த இடத்தை அஜீத் மிக எளிதாக பிடித்துவிடுவார் என்றே கோலிவுட்டில் கூறப்படுகிறது.

விஜய் நடித்த ‘புலி’ திரைப்படத்தால் தங்களுக்கு நஷ்டம் என அதன் தயாரிப்பாளர்களே ஸ்ரீதேவியின் பிரச்சனையின்போது ஒப்புக்கொண்டனர். ஆனால் அஜித்தின் ‘வேதாளம்’ ரஜினியின் ‘எந்திரன்’ மற்றும் ‘சிவாஜி’ படங்களின் வசூலை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது.

தமிழகத்தில் மட்டும் ‘எந்திரன்’ திரைப்படம் ரூ.102.56 கோடியும், சிவாஜி ரூ.74.89 கோடியும் வசூல் செய்துள்ளது. வேதாளம் திரைப்படம் தற்போது வரை ரூ.70.34 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது. ‘லிங்கா’ ரூ.68.26 கோடியும் துப்பாக்கி ரூ.67.80 கோடியும் வசூல் செய்துள்ளது. மேலும் 6வது இடத்தில் ஆரம்பம், 7வது இடத்தில் ‘ஐ’, 8வது இடத்தில் ‘வீரம்’ மற்றும் 9வது இடத்தில் ‘கத்தி’ என வசூல் வகையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அதிக வசூல் செய்த படங்களில் மூன்று ரஜினி படங்களும், மூன்று அஜித் படங்களும் இரண்டு விஜய் படங்களும் ஒரு ஷங்கர் படமும் அமைந்துள்ளதால் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் எளிதில் அஜித்துக்கு சென்றுவிடும் என்றே தோன்றுகிறது.

Leave a Reply