டுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி

டுவிட்டர் இணையதளம் சற்றுமுன்னர் 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் டாப் 10 ட்ரெண்ட் ஹேஷ்டேக் குறித்து அறிவித்தது. இதில் கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முதல் இடத்தை பிடித்துள்ளது

ஆனால் இதே2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 6 மாதத்திற்கான ஹேஷ்டேக் டிரெண்டில் மக்களவை தேர்தல் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற்ற நிலையில் முதல் ஆறு மாதங்களில் மட்டுமே இந்த ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆக இருந்தது. அதன் பின்னர் லோக்சபா தேர்தல் குறித்த ஹேஷ்டேக் ஒரு நாள் கூட டிரெண்ட் ஆகவில்லை

இந்த நிலையில் முதல் ஆறு மாதத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த லோக்சபா தேர்தல் ஹேஷ்டேக் ஒட்டுமொத்த 2019 ஆம் ஆண்டில் எப்படி முதலிடத்தைப் பிடித்தது என்ற கேள்வியை அஜித் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்

அதேபோல் முதல் ஆறு மாதத்தில் முதல் இடத்தில் இருந்த விசுவாசம் 2019ஆம் ஆண்டின் டிரெண்டில் முதல் 10 இடங்களில் வராமல் போனது எப்படி? என்றும் அதேபோல் முதல் ஆறு மாதத்தில் முதல் 10 இடங்களில் இடம்பெறாத பிகில் எப்படி 2019 ஆம் ஆண்டின் டிரெண்டில் வந்தது என்ற கேள்வியையும் எழுதியுள்ளனர்

அஜித் ரசிகர்களின் இந்த கேள்வியால் அஜித்-விஜய் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply