shadow

வெங்கட்பிரபுவின் கிரிக்கெட் படத்தில் அஜித்?
ajith
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூடியபோது சங்கத்தின் செயலாளர் விஷால் ‘நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார். இந்த போட்டியில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கிரிக்கெட் போட்டியில் அஜித், விஜய் கலந்து கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் அஜித் மற்றொரு கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

வெங்கட்பிரபு இயக்கவுள்ள கிரிக்கெட் சம்பந்தப்பட்ட திரைப்படமான ‘சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு சிறு கேரக்டரில் அஜித், சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘மங்காத்தா’ படப்பிடிப்பின்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக அஜித் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply