விஜய்யை அடுத்து அஜித்துடன் ஜோடி சேரும் பூஜா ஹெக்டே?

விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’ படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் ‘அஜித் 61 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் 61 படத்தை எச்.வினோத் இயக்க உள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அஜித்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் அஜித் 61’ படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கும் அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.