shadow

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை காலமானார்.

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் மும்பை மருத்துவமனையில் சற்று முன் காலமானார். முன்னாள் ராணுவ வீரரான கிருஷ்ணராஜ் ராய் கடந்த சில வாரங்களாக உடல்நலமின்றி மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை அவர் காலமனதாக தகவல்கள் உறுதி செய்துள்ளன.

மாமனார் கிருஷ்ணராஜ் ராய் மரண செய்தி கேட்ட நியூயார்க்கில் உள்ள அவரது மருமகனும், ஐஸ்வர்யாராயின் கணவருமான அபிஷேக் பச்சன், மும்பை திரும்பி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தந்தை உடல்நலமின்றி இருந்ததால் கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யாராய் சோகமே உருவாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply