shadow

ரஜினிக்கு மகளாக திரையில் அறிமுகமாகும் தனுஷ் மனைவி

rajini-aiswaryaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியதை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் மீண்டும் ரஜினி படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ரஜினியின் மகளாக ரஜினியின் உண்மையான மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளதாகவும், ‘கபாலி’ படத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இந்த படம் குடும்ப செண்டிமெண்ட் கலந்த படமாக இருக்கும் என்று ரஞ்சித் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Leave a Reply