shadow

M_Id_464660_Amitabh_Bachchan

இந்தியா முழுவதும் பல கிளைகளை வைத்துள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் புதிய மூன்று கிளைகளை நடிகை ஐஸ்வர்யாராய் நேற்று திறந்து வைத்தார். ஐஸ்வர்யாராய் கல்யாண் ஜுவல்லர்ஸின் விளம்பர தூதர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று புதிய வித்தியாசமான மேக்கப்பில் வந்த ஐஸ்வர்யாராயை கல்யாண் ஜுவல்லர்ஸ் டெல்லி நிர்வாகிகள் வரவேற்றனர். ஐஸ்வர்யாராயை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர்.

டெல்லியில் Pritampura, Defence Colony மற்றும் Karol Bagh ஆகிய மூன்று இடங்களில் நேற்று புதிய கிளைகளை தொடங்கியது.

சென்ற ஆண்டில் கல்யாண் ஜுவல்லர்ஸ் 9400 கோடி இந்தியாவில் வியாபாரம் செய்துள்ளதாக அறிக்கை கூறுகிறாது. வரும் 2015ஆம் ஆண்டு மேலும் 100 கிளைகள் தொடங்கி மொத்த விற்பனையை ரூ.15000 கோடி அளவிற்கு விரிவாக்கம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கல்யா\ண் ஜுவல்லர்ஸின் தேசிய விளம்பர தூதராக ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் உள்ளனர். மேலும் ஆந்திர விளம்பர தூதராக நாகர்ஜுனா, கர்நாடக விளம்பர தூதராக ஷிவ்ராஜ் குமார், தமிழ்நாட்டின் விளம்பர தூதராக பிரபு, மற்றும் கேரளாவின் விளம்பர தூதராக திலீப் ஆகியோர் உள்ளனர்.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1kWLgM6″ standard=”//www.youtube.com/v/tvNq1kHU9i0?fs=1″ vars=”ytid=tvNq1kHU9i0&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6363″ /]

Leave a Reply