shadow

சிம்புவை இயக்க ஆசைப்படும் தனுஷ் மனைவி.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, சில வருடங்களுக்கு முன்னர் சிம்புவை காதலித்ததாகவும், அதன்பின்னர் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுவதுண்டு. இந்நிலையில் சிம்பு நடிக்கும் படத்தை இயக்க ஐஸ்வர்யா தனுஷ் ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே ‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யா தனுஷ் விரைவில் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் சிம்புவை வைத்து ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என்று அவர் ஆவலுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

சிம்புவுக்காக ஒரு ஸ்டைலிஷ் கதை தயாராக இருப்பதாகவும், சிம்புவின் ஒப்புக்கொண்டால் விரைவில் இந்த படத்தை இயக்க ஐஸ்வர்யா தயாராக இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply