shadow

சாலை போக்குவரத்துக்கு மாற்றாக விண்ணீல் பறக்கும் கார்கள் அறிமுகம்

ஒருசில ஆங்கில படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். மனித கற்பனையில் இடம்பெற்ற அந்த பறக்கும் கார்கள் தற்போது உண்மையில் நடைமுறையில் வரப்போகின்றது.

உலகில் சாலைப்போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல பாலங்கள், புதிய புதிய சாலைகள் அமைத்தாலும் பெருகி வரும் வாகனங்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை

இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் ஒன்று பாப் அப் சிஸ்டம்’ (Pop.Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அளவில் சிறியதாக காணப்படும் இந்த ‘பாப் அப் சிஸ்டம்’ சுற்றுச்சூழலுக்கு மாசு உருவாகாத முறையில் பேட்டரியால் இயங்க கூடியது. கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாமல் சாலையிலும், விமானம் போல விண்ணிலும் பறக்கக்கூடியது.

சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டு வரும் இந்த கார் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் 2030ஆம் ஆண்டு வெளிவரும் என தெரிகிறது. பலூன்கள் போல வானத்தில் கார் பறக்கும் அற்புத காட்சியை அடுத்த தலைமுறையினர் கண்டு ரசிப்பார்கள்

Leave a Reply