சீன தலைநகரில் காற்று மாசு சுத்திகரிப்பு கருவி நிறுவ முடிவு.
சுற்றுச்சூழல் சுகாதாரம் என்பது தற்போது உலகில் பெரும் சவாலாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழிற்சாலைகள் அதில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஆகியவை காற்றை மாசுபடுத்துவதோடு, ஓசோன் படலத்தில் ஓட்டையையும் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக பூமி வெப்பமடைந்து பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் உலகின் பல விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் காற்றில் ஏற்படும் மாசுககளை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு சுத்திகரிப்பு கருவி ஒன்றை தயாரித்துள்ளார். இந்த கருவி 23 அடி உயரம் கொண்டது. மிக சிறிய அளவிலான அடுக்குமாடி கட்டிடத்தை போன்று வடிவம் உடைய இந்த கருவியின் உள் பகுதியில் புகையை உறிஞ்சும் தொழில் நுட்பங்களுடன் கூடிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
கால்பந்து மைதான அளவுள்ள இடத்தில் 36 மணி இந்த கருவியை வைத்தால் அந்த பகுதியில் உள்ள 70 முதல் 80 சதவீதம் வரையிலான மாசுபட்ட காற்றை வெளியேற்றி சுத்தம் செய்து புதிய காற்றாக தருகிறது. இக்கருவியை அதிக அளவு காற்று மாசுபட்டுள்ள பெய்ஜிங்கில் நிறுவ சீனா முடிவு செய்துள்ளது.
வரும் செப்டம்பரில் அங்கு இக்கருவி நிறுவப்பட உள்ளது. அதை தொடர்ந்து சீனாவின் மிகப் பெரிய நகரங்களிலும், அடுத்த ஆண்டில் இக்கருவி நிறுவப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.