shadow

கின்னஸ் சாதனை படைத்தது பெண்களின் விமானம்

பைலட் முதல் பணியாளர்கள் வரை முழுக்க முழுக்க பெண் ஊழியர்களுடன் வலம் வந்து, ஏர் இந்தியா விமானம் ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு உலகெங்கிலும் உள்ள பெண்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த தினத்தை ஒட்டி ஏர் இந்தியா விமான நிறுவனம் புதிய சாதனை ஒன்றை படைக்க திட்டமிட்டது. இதன்படி முழுக்க முழுக்க பெண் ஊழியர்களை கொண்டு, விமானம் ஒன்றை வலம் வர செய்துள்ளது. இதற்காக ஏர் இந்தியா விமானம் ஒன்று பிப்ரவரி 27ஆம் தேதி, டெல்லியில் இருந்து கிளம்பிய போயிங் ரக ஏர் இந்தியா விமானம்,  சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது. பசுபிக் பெருங்கடல் வழியாக சென்று, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக உலகை வலம் வந்து பின்னர் மீண்டும் டெல்லி வந்தடைந்தது.

இந்த விமானத்தில் பைலட்கள், ஊழியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தரைக் கட்டுப்பாட்டு பிரிவு ஊழியர்கள் என அனைவருமே பெண்கள் என்பது குறிப்பிடதத்க்கது. ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த உலக சாதனைக்கு பெண்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உலகிலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க பெண்களை கொண்டு இயக்கப்பட்ட இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி இதேபோன்று பெண்களால் நிர்வகிக்கப்படும் விமானத்தை இயக்க உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply