shadow

அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் செல்லாது – ஓபிஎஸ்

இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் கூட்டம் கட்சி விதிகளுக்கு புறம்பானது என ஓபிஎஸ் தகவல்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை எனவும் கருது தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் கட்சியையும், தொண்டர்களையும் கட்டுப்படுத்தாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.