அகமதாபாத் அருகே உள்ள ஒதவ் பகுதியின் சிங்கர்வா கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.

இந்த ஏ.டி.எம். மையத்தில் ரூ.7 லட்சம் பணமிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்த ஏ.டி.எம்.மையத்திற்கு வந்து பணம் இருந்த ஏ.டி.எம். இயந்திரத்தையே கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், ஏ.டி.எம். மையம் அருகே ஒரு கனரக வாகனத்தின் டையர் அச்சு இருந்ததால், கொள்ளையர்கள் ஒரு கனரக வாகனத்தில் வந்து ஏ.டி.எம். இயந்திரத்தை தூக்கி சென்றிருக்கலாமென கருதப்படுகிறது.

இயந்திரத்தின் உள்ளே 6.97 லட்சம் ரூபாய் இருந்ததாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் என்பதும், ஏ.டி.எம். மையத்தின் வெளியே காவலாளி யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply