தஞ்சை மாவட்டம் வல்லம் என்ற ஊரில் ஏகெளரி என்கிற அம்மன் இருக்கிறது. இந்த அம்மன் 2,200 வருடங்களுக்கு முற்பட்டது. மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு அம்மன். தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் வழித்தடத்தில் 12வது கிலோ மீட்டரில் இந்த வல்லம் என்ற ஊர் இருக்கிறது.

சக்தி வாய்ந்த இ‌ந்த அம்மன் கு‌றி‌த்த சான்றுகளும் நிறைய இருக்கிறது. அகநானூறு, புறநானூறுகளில் எல்லாம் இந்த அம்மனைப் பற்றி பாடப் பட்டிருக்கிறது. அதனால் எல்லா வகையிலுமே மிகப் பழமை வாய்ந்தது இந்த அம்மன். சுற்று என்று பார்த்தால் சங்கிலி கருப்பன், சாலியங்காத்தான், லாடசன்னியாசி, பட்டவர் இதெல்லாம் தனித்தனியாக கிராம தேவதைகளாக இருக்கிறது.

இந்த வல்லத்தில் இருக்கக்கூடிய அம்பாளை வணங்கினால் தைரியம் வரும். ஏகெளரி அம்மன் என்று அழைக்கப்படும் இந்த அம்மன் 8 திருக்கரங்களுடன் பத்ம பீடத்தில் காட்சி கொடுக்கிறார். காவல் தெய்வம், எல்லை தெய்வத்திற்கு இந்த அம்மன் மிக சக்தி வாய்ந்தது. பண்டைக் கால மன்னர்கள் போருக்குப் புறப்படுவதற்கு முன் இந்த அம்பாளுக்கு சிறப்பு பூசைகள் செய்துவிட்டு அதன்பிறகு போருக்குப் போனதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக பார்த்தால், வழக்குகளில் வெற்றியடைவது, எதிரிகளை வீழ்த்தக்கூடியது, கடன் போன்ற தொந்தரவுகளில் இருந்து நீக்கக்கூடியது.

இங்கு ஸ்ரீ சக்ர பீடத்தில்தான் அம்பாள் இருக்கிறார். அதனால் மிக மிக சக்தி வாய்ந்த ஒரு தலம் இது. அதனால் நேரம் கிடைக்கும் போது மக்கள் சென்று வருவது மிகவும் நல்லது. எல்லா வகையிலுமே வெற்றி கிடைக்கும். ஏனென்றால், கல்வெட்டு சான்றுகளும் இருக்கிறது. அகநானூறிலும் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. தொல்காப்பிய உரையில் கூட இந்த அம்பாள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. சோழப் பேரரசர்கள் இந்த அம்பாளுக்கு சிறப்பாக‌‌ பூசை செய்திருக்கிறார்கள். சோழப் பேரரசை நிறு‌விய சோழ மன்னர் கூட முழுக்க முழுக்க இந்த அம்மனை வணங்கித்தான் அனைத்தையும் செய்திருக்கிறார்.

பில்லி, சூனியம் செய்துவிட்டார்கள் என்று பயந்து கொண்டிருப்பவர்கள் இந்த ஏகெளரி அம்மன் கோயிலிற்குச் சென்றுவிட்டு வந்தால் இதுபோன்ற பில்லி, சூனியம், மாந்திரிகம் எல்லாம் விலகும். கண் திருஷ்டி எல்லாம் கூட விலகும். சோழர்களும், பாண்டியர்களும் வணங்கி அருள் பெற்ற அம்மன். 2,200 வருடங்களுக்கு முற்பட்ட மிகப் பழமையான அம்மன் இந்த ஏகெளரி அம்மன். அதனால் இது ஒரு சிறப்பு வாய்ந்த தலமாக விளங்குகிறது.

Leave a Reply