அக்னி நட்சத்திரம்—பற்றி தெரிந்துகொள்வோம்

Tamil-Daily-News_51993525029
அக்னி நட்சத்திரம்—பற்றி தெரிந்துகொள்வோம்:

அக்னி நட்சத்திரம் என்னும் கோடை காலத்தின் உச்ச கட்டத்தை கத்திரி என்றும் கூறுவர். மன்மத வருடம் மே 4-ம் தேதி(04-05-2015) ஆரம்பித்து மே 28-ம் தேதி(28-05-2015) வரை அக்னி நட்ச்சத்திரம், அதாவது சித்திரை 21 முதல் வைகாசி 14-ம் தேதி வரை. நல்ல காரியங்களைச் சித்திரை பின் 7 நாட்களும், வைகாசி முன் 7 நாட்களும் தவிர்த்தல் நலம்.

அக்னி நட்சத்திர காலத்தில் செய்யக்கூடியவை:
உபநயனம், விவாகம், யாகங்கள், தர்ம மற்றும் பொது ஸ்தாபன விஷயங்கள் மற்றும் கட்டிடம் அமைத்தல்.
அக்னி நட்ச்த்திரத்தில் செய்யக்கூடாதவை:

செடி, கொடி வெட்டுதல், நார் உரித்தல், நிலம், வீடு, வாகனம் வாங்குதல், பதிவு செய்தல், விதை விதைத்தல், சாந்திமுகூர்த்தம், கிணறு வெட்டுதல், குளம், குட்டை அமைத்தல், குருவிடம் தீட்சை பெருதல். அக்னி நட்ச்திரம் என்பது விவசாய பணிகளுக்காக சொல்லப்படும் தொஷகாலம்.

Leave a Reply

Your email address will not be published.