மீண்டும் தமிழகத்தில் கனமழை: வானிலை மைய அறிவிப்பால் விடுமுறை அளிக்க வாய்ப்பு

மீண்டும் தமிழகத்தில் கனமழை: வானிலை மைய அறிவிப்பால் விடுமுறை அளிக்க வாய்ப்பு

தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தென் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தென் மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இதனை அடுத்து இந்த வார இறுதியில் கனமழை பெய்யும் என்பதால் தென் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மிதமான கனமழை பெய்யும் என்றும் இதனால் அடுத்து இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் ஓரளவு மழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Leave a Reply