shadow

விஜய்க்கு அடுத்து கருணாகரன். தேவா எடுத்த அதிரடி முடிவு
deva
விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற ‘ஜித்து ஜில்லாடி’ என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடியவர் பிரபல இசையமைப்பாளர் தேவா என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விஜய்க்கு ஒரு அட்டகாசமான பாடலை பாடிய தேவா, தற்போது காமெடி நடிகர் கருணாகரனுக்காக ஒரு குத்துப்பாடலை பாடியுள்ளார்.

‘அண்ணன்தாண்டா டான்’ என்று ஆரம்பிக்கும் இந்த குத்துப்பாடலை தேவாவுடன் சேர்ந்து  கானாபாலா, அந்தோணிதாசன் ஆகியோர்களும் பாடியுள்ளனர். இந்த பாடல் ‘விதி மதி உல்டா’ என்ற படத்திற்காக பாடப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை இயக்குனர் ரமேஷ் ராஜா இயக்கி வருகிறார். இவர் விஜய் நடித்த ‘துப்பாக்கி’, கத்தி ஆகிய இரண்டு படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் டேனியல் பாலாஜி, ஜனனி ஐயர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் அஸ்வின் என்ற இசையமைப்பாளர் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply