shadow

rajesh movieஆர்யாவின் சொந்த நிறுவனமான ‘தி ஷோ பியூப்புள்’  தயாரிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த டைட்டிலில் பெயர் VSOP. விரிவாக ‘வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க’. ராஜேஷின் முந்தைய படங்கள் SMS, OKOK ஆகிய சுருக்கமான டைட்டில்களை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆர்யா, தமன்னா முதல்முறையாக ஜோடி சேரும் இந்த படத்தில் ராஜேஷின் ஆஸ்தான நடிகர் சந்தானமும் முக்கிய வேடமேற்கிறார். மேலும் இந்த படத்தில் முக்தா பானு, வெண்ணிற ஆடை முர்த்தி,  ரேணுகா, கருணாகரன், சித்தார்த் விபின், வித்யூ லேகா மற்றும் பலர் நடிக்க உள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜாக்கி  கலை வண்ணத்தில், இமான் இசை அமைக்க உள்ள இந்தப் படம் சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது.

பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற வெற்றி படத்திற்கு பின்னர் மீண்டும் இணையும் ஆர்யா-ராஜேஷ் ஜோடி, அதே வெற்றியை மீண்டும் கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply