சிவாஜி, ரஜினி , கமலின் 150வது படம் தெரியும்: சரத்குமாரின் 150வது படம் எது தெரியுமா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ’சவாலே சமாளி’ 150வது படமாகவும், உலக நாயகன் கமலஹாசனுக்கு ’அபூர்வ சகோதர்கள்’ 150 வது படமாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ‘படையப்பா’ 150வது படமாகவும் அமைந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் சரத்குமாரின் 150வது படம் குறித்து அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது.

‘தி ஸ்மைல் மேன்’ என்ற திரைப்படம் தான் சரத்குமாரின் 150வது திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது என்பதும், இந்த படத்தை ஷ்யாம் பிரவீன் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.