’ராதே ஷ்யாம்’ ரிலீஸ் ஒத்திவைப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது ’ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரபூர்வமாக அறிவிப்பை ’ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பெருகி வரும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக ’ராதே ஷ்யாம்’ படத்தை இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாகவும் விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம் என்றும் ’ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

மிக விரைவில் ’வலிமை’ படக்குழுவினர்களிடம் இருந்தும் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.