shadow

1

பாலிவுட் நட்சத்திரங்களில் உடல்தானம் செய்து புரட்சி ஏற்படுத்தியவர் என்றால் அது பிரியங்கா சோப்ராதான். அவரை அடுத்து இன்று நடிகர் அமீர்கான், உடல்தானம் செய்து அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையெழுத்திட்டார்.

மும்பையில் இன்று நடந்த  KEM Hospital, மருத்துவமனை சார்பில் Maharashtra Cadaver Organ Donation Day தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் அமீர்கான், தன்னுடைய உடல் முழுவதையும் தானம் செய்வதாக உறுதிமொழி பத்திரம் எழுதிக்கொடுத்தார்.

உடல்தானம் என்பது ஒருவர் மூளைச்சாவு ஆன பின்னர், தன்னுடைய உடலில் இருக்கும் பாகங்களை மற்றொருவருக்கு தானமாக கொடுக்க இசைவது. இதனால் அந்த உடல் உறுப்புகள் ஊனமாக இருக்கும் ஒருவர் பயன்பெறுவார். இந்த உடல்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை ப்ரியங்கா சோப்ரா தன்னுடைய உடல் முழுவதையும் தானம் செய்தார். அவரை அடுத்து இன்று அமீர்கானும் உடல்தானம் செய்தார். இன்னும் பல பாலிவுட் நட்சத்திரங்கள் உடல்தானம் செய்ய முன்வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

Leave a Reply