shadow

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அமைச்சர்களின் செயல்பாடு எப்படி?

ஜெயலலிதா இருந்தவரை அவரிடம் இருந்து உத்தரவு வந்த பின்னரே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒவ்வொரு வேலையையும் செய்ததாகவும்,  ஆனால் தற்போது அமைச்சர்கள் சுயமாக முடிவு எடுத்து வருவதாகவும் பரவலாக பேசப்படுகிறது.

இதுகுறித்து பெயர் கூற விரும்பாத ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘வர்தா புயலின்போது மத்திய அரசிடமிருந்து வரும் பணத்தை எதிர்பார்க்காமல், உடனடியாக முதல்வரே முடிவெடுத்து ரூ.500 கோடி ரூபாயை முதல்கட்டமாக நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் அறிவித்தது நல்ல நடவடிக்கை.

கடந்த ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடுவதில் கூட முதல்வர் ஜெயலலிதாவிடம்  இருந்து உரிய நேரத்தில் சிக்னல் கிடைக்காததுதான் பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், புது முதல்வரிடம் அந்தமாதிரி பிரச்னை இல்லை. அத்தோடு, அமைச்சர்கள் இப்போதெல்லாம் மீடியாக்களிடம் ஃப்ரீயாக பேசுகிறார்கள். அரசின் முக்கிய செயலாளர்களை எளிதில் தொடர்புகொள்ளமுடிகிறது’ என்று கூறினார்.

முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் இருந்த இரும்புத்திரை தற்போது விலகியுள்ளதாகவும், இதுவொரு நல்ல ஆரம்பம் என்றும் அனைவரும் கருதி வருகின்றனர்.

Leave a Reply