shadow

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக நடந்த அபூர்வ நிகழ்வு

கிரிக்கெட் தோன்றியதில் இருந்து இதுவரை நடந்திராக அபூர்வ நிகழ்வு ஒன்று ஆப்கானிஸ்தான் – ஜிம்பாவே ஒருநாள் போட்டி தொடரில் நடைபெற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது. பின்னர் 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 34.4 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையே 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் எடுத்த அதே 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது. அதேபோல் பின்னர் 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியை தங்கள் அணி எடுத்த அதே 179 ரன்களில் ஆல் அவுட் ஆக்கி ஜிம்பாப்வே 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் எவ்வளவு ரன்கள் எடுத்து, ஜிம்பாப்வேயை எவ்வளவு ரன்னில் சுருட்டி வெற்றி பெற்றதோ, அதேபோல், 2-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அதே ரன்களை எடுத்து, ஆப்கானிஸ்தானை அதே ரன்னில் சுருட்டி வெற்றி பெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் இதுவொரு அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply