சென்னை அண்ணா நகரில் நேற்று, பட்டப்பகலில் 40வயதுள்ள ஆண் ஒருவரும், அவருடன் வந்த இளம்பெண் ஒருவரும் தீக்குளித்து இறந்தனர்.
அமைந்தகரையைச் சேர்ந்த  குமார், சரஸ்வதி என்ற பெண்ணுடன் பைக்கில் வந்துகொண்டிருந்தார். அண்ணாநகரில் மக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் வண்டியை நிறுத்தினர். கண்ணிமைக்கும் நேரத்தில் குமார் திடீரென அந்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் தன் உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இருவரும் தீப்பிடித்து எரிவதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் இருவரும் தீயில் கருகி இறந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

நடுத்தெருவில் தற்கொலை செய்துகொண்ட குமார்& சரஸ்வதி இருவரும் கள்ளக்காதல் ஜோடிகள். சரஸ்வதி மீது சந்தேகமடைந்த குமார் தானும் தற்கொலை செய்து சரஸ்வதியை கொன்றுவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *