நிர்பயா வழக்கு: கடைசி நேரத்தில் திருட்டு வழக்கை கொண்டு வந்த வழக்கறிஞர்கள்

நிர்பயா வழக்கு: கடைசி நேரத்தில் திருட்டு வழக்கை கொண்டு வந்த வழக்கறிஞர்கள்

டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு திடீரென குற்றவாளிகளின் வழக்கறிஞர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை சுட்டிக்காட்டினர்

நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அதே டிசம்பர் 16ஆம் தேதி அதே பேருந்தில் இருந்த ஒருவரிடம் குற்றவாளிகள் நகை மற்றும் பணத்தை திருடியதாகவும், அந்த வழக்கு தற்போது டெல்லி நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும் அந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்னரே நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது தவறான உதாரணமாக ஆகிவிடும் என்றும் வாதாடினார்

ஆனால் வழக்கறிஞரின் வாதத்தால் கோபமடைந்த நீதிபதிகள் ’மனுதாரர் அனைத்தும் வாய்ப்புகளும் முடிந்து விட்டது என்றும் இப்போது வந்து திடீரென கோரிக்கை வைத்தால் அதை நிறைவேற்ற முடியாது என்றும் குற்றவாளிகளுக்கு சாதகமாக தங்களால் எந்தத் தீர்ப்பும் வழங்க முடியாது என்றும் ஏற்கனவே தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது என்பதால் அதனை மாற்ற முடியாது என்றும் கண்டிப்பாக குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்

குற்றவாளிகளை காப்பாற்ற கடைசி வரை அவர்களது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் போராடி உள்ளார் என்பது இதிலிருந்து தெரியவருகிறது

Leave a Reply