shadow

மு.க.ஸ்டாலினுடன் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு

அதிமுக ஆதரவு எம்.எல்.ஏகள் 3 பேர் திடீரென சட்டமன்ற ஏதிர்க்கட்சி தலைவரும் , திமுக செயல்தலைவமான மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஆதரவு எம்.எல்.ஏகளான கருணாஸ், தமிமூன் அன்சாரி, தனியரசு ஆகியோர் மூன்று பேரும் சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர். ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதில் கூட தினகரன் கைகாட்டும் வேட்பாளருக்கே தனது ஆதரவு என்று கூறி வந்தனர்.

இந்த நிலையில் சட்டமன்ற ஏதிர்க்கட்சி தலைவருமான , திமுக செயல்தலைவரும் ஸ்டாலினை இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, பேரறிவாளன் பரோல் குறித்து பேரவையில் ஆதரவு தருமாறு இவர்கள் மூவரும் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தாக கூறப்படுகிறது.

முன்னதாக ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன் உடல் நலக்குறைவால் பதிக்கப்பட்ட தனது தந்தையை சந்திக்க பரோல் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு பரோல் அளிக்க சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.

இதனையடுத்து இந்த விவககாரம் தொடர்பாக சட்டபேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அதிமுக ஆதரவு எம்.எல்.ஏகளான கருணாஸ், தமிமூன் அன்சாரி, தனியரசு ஆகியோர் மூன்று பேரும் முடிவு செய்துள்ளனர். இவர்களுடைய முயற்சிக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி கூறியுள்ளார்.

Leave a Reply