பாஜகவை கழட்டிவிடுகிறதா அதிமுக? வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளதை அடுத்து பாஜகவை கூட்டணியில் இருந்து அதிமுக கழட்டிவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு பற்றிய பேச்சு வார்த்தையை அதிமுக மற்றும் பாஜக கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மாநகராட்சி மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை முடியும் முன்னரே அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருப்பது கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது