shadow

அதிமுக விரித்த வலையில் விழுந்துவிட்டதா தேமுதிக? கூட்டணியில் திருப்பம் ஏற்படுமா?
dmdk
தமிழகத்தில் தேர்தல் திருவிழா இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும் வேட்பாளர் தேர்வு குறித்தும் தீவிர ஆலோசனையில் உள்ளது. இந்நிலையில் அதிமுக மட்டும் தங்கள் கூட்டணியில் யாரை சேர்க்க வேண்டும் என்பதை விட எதிர்க்கூட்டணியான திமுகவில் யார் யாரெல்லாம் சேரக்கூடாது என்பதில் கவனத்துடன் உள்ளது.

‘அதிமுக 2’ என்று கூறப்படும் ‘மக்கள் நலக்கூட்டணிதான் அதிமுகவின் பலமே. இந்த கூட்டணியில் உள்ள மதிமுக, இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் ஆகியவை திமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ள கட்சிகள். தற்போது மக்கள் நலக்கூட்டணி என்று மூன்றாவது அணியாக இருப்பதால் திமுக கூட்டணி கூட்டணியின் பலம் குறைந்தது மட்டுமின்றி ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளையும் இந்த கூட்டணி பிரித்து விடுகிறது.

மேலும் தற்போது அதிமுகவுக்கு இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை தேமுதிக எந்த கூட்டணி என்பதில்தான். தேமுதிக எக்காரணத்தை முன்னிட்டும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணையாதவாறு பல உள்ளடி வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது.

திமுக, அதிமுக என மாறி மாறி இரண்டு கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி அமைத்தால் அவர்கள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருவார்கள். நீங்கள் எப்போது ஆட்சிக்கு வரப் போகிறீர்கள். இப்போது இல்லாவிட்டாலும் அடுத்தடுத்த தேர்தல்களிலாவது தேமுதிக ஆளும் பொறுப்புக்கு வர வேண்டுமானால், இந்தத் தேர்தலில் திமுக வுடன் அறவே சேரக் கூடாது என்று தேமுதிகவுக்கு பாஜக உள்பட ஒருசில கட்சிகளின் மூலம் மறைமுகமாக வற்புறுத்துவது அதிமுகவின் வேலை என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

மக்கள் நலக்கூட்டணி அல்லது பாஜக கூட்டணியுடன் தேமுதிக இணைந்தால் அதிமுக வெற்றி உறுதி என்றே கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தால் அவரது தனித்தன்மை நிச்சயம் பாதிக்கப்படும் என்றும் எனவே அந்த கூட்டணியில் சேர வேண்டாம் என்றும் விஜயகாந்துக்கு அவரது நெருக்கமானவர்கள் மூலம் அதிமுக வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே அதிமுக விரித்த வலையில் தேமுதிக விழுவது உறுதி என்றும், மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிப்பதும் உறுதி என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply