shadow

அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டம். முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா?

admkமுதல்வர் ஜெயலலிதா உடல்நிலை நேற்று சற்று அபாயகரமாக இருந்ததாக வெளிவந்த செய்தியினால் தமிழகமே பரபரப்பு அடைந்ததை அடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் உடனடியாக சென்னைக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

இதன்படி அனைத்து எம்.எல்.ஏக்களும் சென்னை அப்பல்லோவுக்கு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு சென்னையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. அதிமுகவை பொருத்தவரை பொதுச்செயலாளர் மட்டுமே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று யாருடைய தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது, என்ன முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என்பது குறித்து இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும்

Leave a Reply