காவிரி மேலாண்மை இல்லையேல் ராஜினாமா? அதிமுக எம்.எல்.ஏ அதிரடி

காவிரி மேலாண்மை இல்லையேல் ராஜினாமா? அதிமுக எம்.எல்.ஏ அதிரடி

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், விவசாயிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் வரும் மே மாதம் 12ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பதை புரிந்து கொண்ட மத்திய பாஜக அரசு, அதனை அமைக்காமல் இழுத்தடித்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் தமிழக எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நேற்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டினார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்ட கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழக முதல்வரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்குவேன் என்று கலசப்பாக்கம் அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.