நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்குமா? முதல்வர் விளக்கம்

நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்குமா? முதல்வர் விளக்கம்

பாஜக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாளை தெலுங்கு தேச கட்சி கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனைக்கு பதிலடி கொடுக்க அதிமுகவும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஆந்திர பிரச்னைக்காக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது. காவிரி பிரச்னையின்போது நாடாளுமன்றத்தில் எந்த கட்சியும் தமிழகத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்று கூறினார்.

Leave a Reply