shadow

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை இழுக்க முயற்சிக்கும் பாஜக

18-jayalalitha-modi8-600-jpgஆரம்பத்தில் மோடியின் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்த மகாராஷ்டிராவின் சிவசேனா, பஞ்சாபின் அகாலி தளம், ஆந்திராவின் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தற்போது மோடி மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும் எனவே இனிவரும் மசோதாக்களில் இந்த கட்சிகள் ஆதரவு கொடுக்குமா? என்ற சந்தேகம் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த இக்கட்டான நிலைமையை சமாளிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை இழுக்க பாஜக தீவிரம் காட்டுவதாகவும் விரைவில் நடைபெறவுள்ள மோடி-ஜெயலலிதா சந்திப்பில் இது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

மக்களவையில் 37 எம்.பிக்கள், மாநிங்களவையில் 12 உறுப்பினர்கள் என மொத்தம் 49 எம்.பிக்களை அதிமுக கைவசம் வைத்துள்ளதால் இந்த எம்.பிக்களின் ஆதரவு பாஜகவின் ஆட்சிக்கு பெரிதும் கைகொடுக்கும் என்றும் எனவே அதிமுகவை எப்படியாவது தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் இழுக்க பாஜக தலைமை தீவிர முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிமுகவை விமர்சிப்பதை தவிர்க்கும்படி தமிழக பாஜக தலைவர்களுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply