அதிமுக கூட்டணியில் அதிருப்தி: கமல் கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக?

அதிமுக கூட்டணியில் தேமுதிக அதிருப்தி அடைந்திருப்பதாகவும் இதனால் அக்கட்சி கமல் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

இன்று அமைச்சர் தங்கமணி வீட்டில் அதிமுக-தேமுதிக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

தங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அதிமுக தரவில்லை என்றும் தங்களை அதிமுக மதிக்கவில்லை என்றும் தேமுதிக குற்றம் சாட்டியுள்ள நிலையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை தேமுதிக நிர்வாகிகள் தவிர்த்து விட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் கமல்ஹாசன் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply