கோவை அரசு கலைக்கல்லூரியில் எம்.காம், சிஏ பாடத்திற்கு 19ம் தேதி அட்மிஷன்

images (3)

கோவை : கோவை அரசு கலைக்கல்லூரியில் நடப்பாண்டில் புதிய பாடமாக எம்காம்சிஏ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடத்திற்கான மாணவர் சேர்க்கை 19ம்தேதி முதல் நடக்கிறது. இதற்கு பி.காம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நடப்பாண்டில் 50 இடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பபடிவத்தின் விலை ரூ42 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மாணவர்களும் கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெறவேண்டும். விண்ணப்பம் பெற வரும் போது மதிப்பெண் பட்டியல் கொண்டு வர வேண்டும். மாணவர் சேர்க்கை மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது என கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.