ஏடிஎம் மிஷினில் பணப்பற்றாக்குறை: மக்கள் அவதி

ஏடிஎம் மிஷினில் பணப்பற்றாக்குறை: மக்கள் அவதி

இந்தியாவின் ஒருசில மாநிலங்களில் உள்ள ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர். இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறியபோது, ‘நாட்டில் போதுமான அளவு பணம் புழக்கத்தில் உள்ளது. சில பகுதிகளில் தேவையின் காரணமாக அதிகளவில் பணம் எடுக்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’’ என்று ஏடிஎம் பணப் பற்றாக்குறைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஏடிஎம்ல் பணப்பாற்றக்குறை என்பது கர்நாடகா, குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில்கடந்த 2 நாட்களாக இருந்து வருகிறது. பொதுமக்கள் ஏடிஎம்-ல் பணம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். சில இடங்களில் ஏடிஎம்-கள் மூடப்பட்டுள்ளன.

பாட்னாவில் கடந்த மூன்று நாட்களாக ஏடிஎம்-களில் பணம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வதோதராவிலும் பெரும்பாலான ஏடிஎம்-கள் மூடப்பட்டும், சில ஏடிஎம்-களில் நீண்ட வரிசையில் நின்ற பின்னரும் ரூ. 10,000 மட்டுமே எடுக்க முடிந்தது என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.