shadow

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்- அமைச்சர்

பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேட்டியளித்தார்.

அப்போது அவர், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ மாணவர்களும் பொறியியல் படிப்பில் சேர ஏதுவாக, அவர்களது தேர்வு முடிவு வெளியானதிலிருந்து 5 நாட்கள் வரை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்படும் என்றார்.