shadow

தொழிலதிபர் அதானி மனைவி ராஜ்யசபா உறுப்பினர் ஆகின்றாரா?

ஆசியாவின் நம்பர் ஒன் தொழிலதிபர் அதானியின் மனைவி ராஜ்யசபா உறுப்பினராக ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன

இதுகுறித்து அதானி குரூப் விளக்கம் அளித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதானி அல்லது அவரது மனைவி ப்ரீத்தி அதானி ஆகிய இருவருக்கும் அரசியலில் இணையும் ஆர்வம் இல்லை என்றும் எனவே அதானி மனைவி ராஜ்யசபை உறுப்பினர் ஆக இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி தவறானது என்றும் கூறியுள்ளனர்

மேலும் அதானி குடும்பத்திற்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்