அம்பானியை பின்னுக்கு தள்ளினார் அதானி!

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியை தொழிலதிபர் அதானி பின்னுக்கு தள்ளியுள்ளார்.

அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் 4.12 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

ஆனால் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி மட்டுமே அதிகரித்துள்ளது.

பங்குவர்த்தகத்தில் முகேஷ் அம்பானி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்து கொண்டே வரும் நிலையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து கொண்டே வருகிறது.

அதானியின் சொத்து மதிப்பு 6.60 லட்சம் கோடி என்றும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு அதைவிட குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது