shadow

9 முறை திருமணம் செய்த பிரபல நடிகை 99 வயதில் மரணம்

ஒன்பது முறை திருமணம் செய்த பிரபல ஹங்கேரி நாட்டு நடிகை Zsa Zsa Gabor என்பவர் தனது 99வது வயதில் மாரடைப்பு காரணமாக கடந்த ஞாயிறு அன்று மரணம் அடைந்தார்.

Zsa Zsa Gabor மறைவை அவரது ஒன்பதாவது கணவர் Frederic von Anhalt என்பவர் உறுதி செய்துள்ளார். இவர் கடந்த 1986ஆம் ஆண்டு Zsa Zsa Gaborவின் ஒன்பதாக கணவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002ஆம் ஆண்டு கார்விபத்து ஒன்றில் சிக்கியதில் இருந்தே அவ்வப்போது Zsa Zsa Gabor உடல்நலம் இன்றி இருந்ததாகவும், கடந்த ஞாயிறு அன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் மரணம் அடைந்துவிட்டதாகவும் அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Leave a Reply