பிரபல நடிகை த்ரிஷாவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையின்போது பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது போல் மூன்றாவது அலையிலும் சினிமா, அரசியல் பிரமுகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது

இந்த நிலைய்ல் பிரபல நடிகை த்ரிஷாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

எனக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது என்றும், நான் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளதால் பெரிய அளவில் பாதிப்பில்லை என்றும் விரைவில் குணமடைந்துவிடுவேன் என்ரும் த்ரிஷா தெரிவித்துள்ளார்.