நள்ளிரவில் நடிகை ஷாலு மீது தாக்குதல்: பெரும் பரபரப்பு!

நள்ளிரவு நேரத்தில் வாக்கிங் போன இளம் நடிகை ஷாலு சௌராசியா என்பவர் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இரவு நேரத்தில் நடைபயிற்சி மேற் கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் அவரை தாக்கியுள்ளார்.

மேலும் நடிகையின் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் நடிகை ஷாலுவின் கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.