அஜீத் அறிமுகமான ‘அமராவதி ‘ என்ற படத்தில் அறிமுகமான நடிகை சங்கவி, பின்னர் விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்பிள்ளை, போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் சுமார் 80 படங்களில் இதுவரையில் சங்கவி நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் மைசூரில் பிறந்த இவருக்கு 36 வயது. இதுவரை திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதாக சமீபத்தில் ஒரு கிசுகிசு வந்தது. ஆனால் அதை மறுத்துள்ளார் சங்கவி.

2010ஆம் ஆண்டு சாவித்திரி என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க வந்த சங்கவி அதன்பின்னர் திடீரென சினிமா, தொலைகாட்சி ஆகியவைகளில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது காலபைரவர் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

சினிமாவில் அக்கா, அண்ணி வேடங்களில் மட்டுமே நடிக்க அழைப்பு வருவதால் சினிமாவை தவிர்த்துவிட்டதாகவும், தற்போது தன்னுடைய கவனம் முழுவதும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்வதில் மட்டுமே உள்ளது என்றும் கூறியுள்ளார். தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், 2014ஆம் ஆண்டில் தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்திருக்கிறார்கள் என்றும் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில் தெரிவித்தார்.

Leave a Reply