பிரபல கன்னட நடிகரின் மனைவிக்கு விபத்து. பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி.

bangalore
கன்னட நடிகர் உபேந்திராவின் மனைவியும் பிரபல கன்னட நடிகையுமான பிரியங்கா பெங்களூரில் நடந்த ஒரு விபத்தில் சிக்கியதால், படுகாயத்துடன் தனியர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கர்நாடகாவின் பிரபல நடிகர் உபேந்திராவின் மனைவி பிரியங்கா. இவரும் ஒரு முன்னணி நடிகையாக கன்னடதிரையுலகில் இருந்து வருகிறார். பிரியங்கா, வெளிநாட்டில் இருந்து வந்திருந்த தனது உறவினர்களுடன் பெங்களூரை சுற்றிப்பார்க்க சென்றபோது ஏற்பட்ட எதிர்பாராத விபத்து காரணமாக. அவர் படுகாயம் அடைந்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவருடன் சென்ற அவரது உறவினர்களுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒரு முக்கிய சர்ஜரி செய்யவேண்டும் என்றும், அதனால் அவருடைய கணவர் உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உபேந்திரா தற்போது வடமாநிலத்தில் படப்பிடிப்பில் இருப்பதால் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் உடனடியாக விரைந்து பெங்களூர் நோக்கி வந்துகொண்டிருக்கிறார். பிரியங்கா திரிவேதி என்று அழைக்கப்படும் பிரியங்கா தமிழில் காதல் சடுகுடு, ராஜா, ஐஸ்,ஜனனம்,ராஜ்ஜியம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Leave a Reply