பாடகியாக மாறிய தேசிய விருது பெற்ற நடிகை
கோலிவுட் திரையுலகில் ஏற்கனவே ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன், லட்சுமிமேனன் ஆகியோர் பின்னணி பாடல்களை பாடி வரும் நிலையில் சமீபத்தில் இந்த பட்டியலில் பிரபல நடிகை காஜல் அகர்வால் இணைந்தார். எம்.சரவணன் இயக்கி வரும் ‘சக்கரவியூகா’ என்ற படத்திற்காக காஜல் அகர்வால் கன்னட பாடல் ஒன்றை பாடினார்.
இந்நிலையில் காஜலை தொடர்ந்து தேசிய விருது பெற்ற பிரபல நடிகை ப்ரியாமணியும் கன்னட பாடல் ஒன்றை பாடியுள்ளார். கன்னட நடிகர் அகுல் பாலாஜி நடித்து வரும் Devravne Budu Guru என்ற படத்தில் ப்ரியாமணி ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை கேட்ட இயக்குனர் பிரதாம் அவர்களும் நாயகன் அகுல் பாலாஜியும் ப்ரியாமணியை பாராட்டியதாகவும் தொடர்ந்து அதிக பாடல்களை பாடும்படி அவரை கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது
Chennai Today News: Actress Priyamani turns singer
Leave a Reply
You must be logged in to post a comment.